தமிழகத்தில் இந்த வாரம் பரவலாக மழையும், இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமையும் (அக்.16), சனிக்கிழமையும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதுடன், வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் சாத்தியமும் இருப்பதாகவும் கூறியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி, அக்-12 முதல் 15-ம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து 16, 17-ம் தேதிகளில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.